நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

நான் பறக்கும் தருணம் வந்தும் 
மிதந்து நிற்கிறேன்...,
இவ்விடத்தின் 
அமைதி 
என்னுள் ஆழ்ந்த்திருப்பதால்........

                                                      - கலைவாணி 



மழை

இன்னும் போதவில்லை
உன் நனைவித்தலை அதிகப்படுத்து.,


                                 - கலைவாணி ( ஆகஸ்ட் 22 ' 2012 ) 

பெண்கள்

இந்த சுதந்திர பொழுது 
வானம் போல் பறந்து விரியட்டும்...
விதிகள் இல்லாமல் ...,

                                      - கலைவாணி (ஆகஸ்ட் 22 ' 2012 ) 

காதல்

பாதை கண்ணுக்கு தூரமா தெரியுது
விளக்கொழிய துணையா வச்சு 
நா காத்து கெடக்கும் போது...,
உன்னோடு மல்லுகட்டி 
வாய் பேச என் கொலுசும் தான் 
காத்து கெடக்கு என்ன போல..,
நாரோட சேர்த்து கட்டிக்கம்ம
என் மனசுபோல தரையில
விழுந்து கெடக்கு பூவு...,
நேத்து நீ செஞ்ச குறும்புல
ஒடஞ்சு போன வளவிபோல
இன்னொன்னும் ஒடைய காத்துகிடக்கு..,
என் கைமணத்துல செஞ்சுவச்ச
மீன்கொழம்பும்,
சீவிசிங்கரிச்ச என் அழகும்..,
உன்ன நாசபடுத்தும்
சாராயம் முன்னாடி
தோத்துத்தான் போச்சே..
என் கண்ணிற்துளிக்கு பதில்
சொல்லமுடியாம
நிலவும் தான் ஓடி ஒளியுதையா..
குடிச்சு அழியிறனு
கோவத்துல சண்டபுடிக்க
மடிமேல செஞ்சுகிட்டு கேப்ப
"சோறு சாப்புட்டியா புள்ள ?"
ஒத்த வார்த்தையில
நெஞ்சுல கூட்டிவச்ச
நெருப்பெல்லாம் அணைச்சுபுடுற..,
எத்தன உனக்கென்ன நா கெடந்தாலும்
உன் பாசத்துல
என் பாசம் தோத்துத்தான்
போயிடுது....,


                                           - கலைவாணி ( ஆகஸ்ட் 22 ' 2012 )




மஞ்சள் முகம்...,
குங்குமம் வைத்த பிறை..,
ஒளியேற்றும் மூக்குத்தி...,
காற்குழலுடன் போட்டியிடும் 
பூ சரம்..,
இடையுறு தந்தாலும்
கதைபேசும் வளைவி...,
மெல்லிசையுடன்
துணை நடக்கும் காற்சலங்கை...,
லாவகமாய் என்னை அணைத்துக்கொண்டு
அழகுக்கு அழகு சேர்க்கும் சேலை...
பணியின் நிமித்தம் இழந்து விட்டாலும்..,
காதலுடன் ஏங்கி நிற்கும் மனம்....,


                                               - கலைவாணி (ஆகஸ்ட் 22 ' 2012 )

நேசம்

நான் விழுந்து
விடமாட்டேன் என்று 
என்னை விட 
நீதான் 
திடமாய் நம்புகிறாய்..., 

                              - கலைவாணி 



              
திரையை விலக்கி
என்றேனும் 
வெளிவருவேன்...,
உன்னுடனே 
பறந்து செல்ல.....

                     - கலைவாணி 


நல் பொழுதுகளை 
சேகரிப்பதில் தான்
இன்பம் உள்ளது......

                         - கலைவாணி ..






நேசம்

நீ தருகின்ற அத்தனையும் 
புதியவையாகவே இருக்கிறது....,
அது நான் கற்றுக்கொள்ள 
வழி வகுக்கும்....

                           - கலைவாணி (ஆகஸ்ட் 20 ' 2012 )




நமக்கான வேலைககளை 
நம் செய்வதின் மூலமே
அதன் நுணுக்கங்களும் , 
இயல்புகளையும் அறிய முடியும்...

                                             - கலைவாணி 


வாசமிக்க மலர்கள் 
மட்டும் தான்
வாழ தகுதியுடையதாய் ..,
இப்புவியில் மலர்வதில்லை...,

                                              - கலைவாணி 




நேசம்

சிறிது நேரம்...,
என் அன்பில் லயித்திரு...,
உன் அன்பின் இதத்தை..,
நான் எப்படி உணர்கிறேன் 
என நீ அறிவாய் .. ?

                                     - கலைவாணி 



நேசம்

நிலா 

வெகுகாலமாய்,
காதலுடனே 
காத்திருக்கிறாய்
என்றபோதும்...
ஒருபோதும் 
வெப்பத்தை 
உமிழ்வதில்லை...,

                             - கலைவாணி (ஆகஸ்ட் 18 ' 2012 )










ஆயிரம் கதை பேசலாம் 
நீயும் நானும் 
புறம் பேசாமல்....,

                                - கலைவாணி 


கரை சேரவேண்டும் 
என்று முடிவெடுத்த 
பின்பு....,
வழி தானாக அமையும்....

                                 - கலைவாணி 



உங்களை தாங்கினோம் நாங்கள்...,
இப்போது எங்களை தாங்குகிறாள் 
பூமி தாய்....,
எங்கள் 
இருவரை போல்
வலிமை இல்லையோ உங்களுக்கு....?
மனம் ............?
உங்கள் 

முதுமையின் போது
எங்களுக்கு
வலிமை இருந்தால்
நிச்சயம் தாங்குவோம்
உங்களை.....


                               - கலைவாணி 


எங்களாலும் முடியும்....


எங்களை 
கொல்வது என 
தீர்மானித்த பிறகு....., 
எங்களில் 
ஒருவருக்கு 
உயிர் கொடுத்து விட்டு
பின்பு கொல்லலாமே.........,

எங்களையும் வளர விடுங்கள்
உங்களுக்காக.......

எங்களையும் வளர்த்து விடுங்கள்
உங்கள் சந்ததிகளுக்காக .............


                                                  - கலைவாணி 


மனிதரில் எத்தனை 
நிறங்கள்....
மதத்தின் பெயரால் 
கொல்வது வெறி நிறம் .....
இனத்தின் பெயரால் 
கொல்வது ஆணவ நிறம்....
வயிற்றுக்காக
கொல்வது வறுமை நிறம்...
தாம் வாழ பிறரை
கொல்வது சுயநல நிறம் ....
பசி தீர்த்து ..,
உயிர் வளர்த்து...,
கொல்லும்
இவர்களின் நிறமென்ன ...?


                                                 - கலைவாணி 

படித்ததில் பிடித்தது

"அவர்கள் ஏன் உன் மீது
கல்லெறிகிறார்கள் "
என்றேன்..
"நான் அவர்களுடைய 
அந்தரங்கத்தின் கண்ணாடி 
அதனால் தான்
என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் "
                               - கவிக்கோ அப்துல் ரகுமான்





படித்ததில் பிடித்தது

சிறிய பூ 
பெரிய பூவிடம் கேட்டது,
" நாம் ஏன் மலர்கிறோம்..?"
பெரிய பூ சொன்னது;
"சூரியன் உதிக்கிறது;
மயில் ஆடுகிறது ;
குயில் பாடுகிறது;
மழை பெய்கிறது ;
அது போலத் தான் 

நாமும் மலர்கிறோம்
அது இயற்கை விதி.
நம்மை பார்த்து
மனிதன் மென்மை அடைகிறான்.
அதற்காக தான் நாம் மலர்கிறோம்.."
- திரு.அப்துல் கலாம் ..






எண்ணம் 
சுயநலம் 
பிறருக்கு மட்டுமே 
உண்டாகும்......
நமக்கு அல்ல......

                      - கலைவாணி 




தற்கொலை 
மட்டுமே 
சிறந்த வழி 
போராட தெரியாதவர்களுக்கு ....

                                                    - கலைவாணி 


படித்ததில் பிடித்தது

சிரிக்கும் பொழுதெல்லாம் 
ஒரு ஆணி 
சவப்பெட்டியிலிருந்து 
நீக்கப்படுகிறது ....

- பொன்மொழி



நேசம்

கண்ணீர் துளி 
தான்,
உன்னை 
அதிகமாக 
நேசிக்க வைக்கிறது......

                               - கலைவாணி (ஆகஸ்ட் 13' 2013)



நேசம்

விலகி நான் 
சென்ற போதும் 
உன்னுடனே 
காத்திருக்கும் 
என் மனம் 
என் வருகைக்காக .......,

                                  - கலைவாணி (ஆகஸ்ட் 11 ' 2012 )



நேசம்

தாழ்ந்த
இமைகளுக்கு தெரியாது 
மீண்டும் 
உன்னை காண 
உயர சொல்வேன் 
என்று........



படித்ததில் பிடித்தது

அருவி பெரும் 
இரைச்சலோடு கொட்டினாலும் 
இமைகளில் இருந்து 
கன்னத்தில் இறங்கும் 
நீர்தான் 
பிரம்மாண்டம்......
- படித்து ரசித்தது....



படித்ததில் பிடித்தது

குழந்தைகள் ஒட்டிய 
இரயிலில் 
கள்ளத்தனமாய் 
ஏறிய கடவுள், 
இறங்கும் இடம் வந்த 
பிறகும்
இறங்காமலே
இருந்துவிட்டார்.....
- படித்து ரசித்தது....




நேசம்

ஆயிரம் தருணங்களை 
உருவாக்குவேன்.,
உன்னுள் என்னை 
இணைக்க.....

                            - கலைவாணி ( ஆகஸ்ட் 8 ' 2012 )